Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வல்லநாடு, தாமிரபரணி  ஆற்றில் 12 உறைகிணறுகள் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து வல்லநாடு தலைமை நீரேற்று நிலை தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, நான்கு குடிநீர் திட்டங்கள் வழியாக தூத்துக்குடியில் உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்க அமைக்கப்பட்டுள்ள வல்லநாடு தலைமை நீரேற்று நிலைய பகுதிக்குச் செல்லும்  மின்பாதையான பாளையங்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை 20-ம் தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதாலும், மின் இணைப்பு இன்றி தண்ணீரை பம்பிங் செய்து விநியோகிக்க இயலாது என்பதால் நாளை மட்டும் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக செலவழிக்குமாறு மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான ராஜாமணி தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close