Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் அனல்காற்று வீச காரணம் இதுதான்..!

'கோடை மழை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நான்கு சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகம் முழுவதும், இந்த ஆண்டு கடுமையான வெயில் நிலவுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே இந்த ஆண்டு கடுமையான வெயில் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே கடுமையான வெப்பம் நிலவிவந்த சூழலில், கடந்த இரு தினங்களாக அளவுக்கு அதிகமான வெப்பநிலை நிலவியது. நேற்று, நுங்கம்பாக்கத்தில் 41.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 42 டிகிரியும் பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் நிலவும் வெப்பநிலைகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், 'ஆந்திரப் பகுதியில், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஆந்திராவின் வடமேற்குப் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றினால், வடதமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, திருத்தணியில் 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக வேலூர்,கிருஷ்ணகிரி,சேலம்,கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது .

அதிகபட்சமாக, தக்கலை மற்றும் தாளவாடியில் 6 செ.மீ மழை பதிவானது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகக்கூடும். உள் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே1 முதல் மே19 வரையிலான காலத்தில், வழக்கமாக 43.6 மி.மீ மழை பதிவாகும். தற்போது வரை 42.1 செ.மீ மழை பதிவாகி யுள்ளது..இயல்பைவிட நான்கு சதவிகிதம் குறைவாகும்' என்று தெரிவித்தார்.

Powered By Tamil Flash News 

தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தமிழக வானிலை அப்டேட்ஸ்களை உடனடியாக பெறலாம்!

இன்ஸ்டால் செய்ய க்ளிக் http://bit.ly/FreeTFN

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close