Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியின் அரசியல் கருத்து... அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வது இதுதான்!

சென்னை கோடம்பாக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே, இன்று கடைசி நாளாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைப் பாராட்டினார். குறிப்பாக , 'போர் வரும்போது பார்த்துக்கொள்வோம், அதுவரை பொறுமையாக இருப்போம்' என்று கூறினார்.

Rajinikanth


இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், "மருத்துவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே, வைர விழாவில் கருணாநிதி பங்கேற்பார் . ரஜினி, என்னை சிறந்த நிர்வாகி எனக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி, தேர்தலுக்கு வருவதைத்தான், 'போர்' என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். அவர், அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி" என்றார்.

Stalin

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அனைவருக்கும் முழு உரிமை இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவரது பேச்சு எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்றைய பேச்சு, சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஊழலுக்குக் காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்?  'அரசியல் மாற்றம் தேவை' என ரஜினி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. 


ஆனால், மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டுவிட்டதாக ஆதங்கப்படும் ரஜினி, தி.மு.க-வைப் பாராட்டியிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. ஊழலுக்குக் காரணமான ஸ்டாலினை, ரஜினி ஏன் புகழ்ந்தார் எனத் தெரியவில்லை. போருக்குத் தயாராவது அவ்வளவு எளிதில் சாத்தியம் கிடையாது,

Tamilisai

அதேபோல, அன்புமணி ராமதாஸைப் பாராட்டி இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. அன்புமணி மீதும் வழக்கு இருக்கிறது. திருமாவளவன் தலித்துகளுக்காகப் பாடுபடுபவர், சீமான் மிகச்சிறந்த போராளி' என்று பாராட்டி இருக்கிறார். இவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் சாதிய பின்புலத்தில் அரசியல் நடத்துபவர்கள்" என்றார்.

 

Panneerselvam

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் கூறுகையில், "ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர். சிறந்த ஆன்மிகவாதி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படித்தான், அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி ரஜினிகாந்த் கருத்துக் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் கருத்து சரியா? தவறா? என்பதுபற்றி முடிவு செய்பவர்கள் மக்களே" என்று கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close