Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீமான், அன்புமணி, திருமாவளவனை ரஜினி ஏன் பாராட்டினார்?

1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராகக் கொடுத்த வாய்ஸுக்குப் பிறகு, ரஜினிகாந்த் மறைமுகமாக அரசு நிர்வாகம் பற்றி மீண்டும் ஒரு முறை வாய் திறந்திருக்கிறார்.  அவர் வெளியிட்டுள்ள மற்றொரு கருத்தையும் பார்த்தாக வேண்டும். 'நான் அரசியலுக்கு வந்தால், நேர்மையாளர்களை மட்டுமே உடன் வைத்துக்கொள்வேன்... பணம் சம்பாதிக்க ஆசை உள்ளவர்கள் போய் விடலாம்''  என்றும்  ரசிகர்களை எச்சரித்துள்ளார். 

rajini

இன்றோ.... 'நல்ல தலைவர்கள்' என சீமான், அன்புமணி, திருமாவளவன் போன்றவர்களைப் பாராட்டியுள்ளார். ரஜினியின் இந்தப் பாராட்டை உற்றுநோக்கினால், அதற்குப் பின்னால் ஓர் அரசியல் ஒளிந்திருப்பதை அறிந்து கொள்ள முடியும். ரஜினி பாராட்டிய நால்வரில் ஸ்டாலினைத் தவிர மூவரும் தீவிரமாகத் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள். சீமானோ ஒரு படி மேலே போய் , 'தமிழகத்தை ஒரு தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும் ' என்பவர். 

ஒரு வேளை, ரஜினி அரசியலுக்கு வந்தால் சீமான் , 'ரஜினி கன்னடர்' என்கிற வாதத்தைக் கையில் எடுக்கக் கூடும். தொடக்கத்திலேயே நட்புணர்வு ஏற்படுத்துகிற வகையில், சீமானைப் பாராட்டி 'செக் ' வைத்திருக்கிறார் ரஜினி என்றே கருதத் தோன்றுகிறது. இப்போதைக்கு ரஜினிக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்தாலும் , நாளைடைவில் எதிர்ப்பு வலு குறைந்து விடவும் வாய்ப்பிருக்கிறது. சீமானைப் போலவே அன்புமணி, திருமாவளவன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்து, அவர்கள் மனதில் நற்பெயரை ஏற்படுத்திக்கொள்ள ரஜினி முனைந்திருக்கிறார். 

ரஜினிகாந்த் 'நானும் தமிழன்தான்' என இதற்கு முன்னர் பல முறை சொல்லியிருக்கிறார்.  இப்போதோ.... 'நான் சுத்தத் தமிழனாக மாறி நிற்கிறேன் என்கிறார் சந்திரமுகி ஸ்டைலில். 'கர்நாடகத்தில் 23 ஆண்டுகளும் தமிழகத்தில் 43 ஆண்டுகளும் வாழ்ந்து விட்டேன்.         மகாராஷ்டித்திலிருந்துதான் கர்நாடகத்துக்கு வந்தேன். ஆனால், தமிழ் மண்ணும் மக்களும்  என்னைத் தமிழராகவே மாற்றிவிட்டனர்' என்று சற்று அழுத்தமாகவே ரஜினி கூறுகிறார். தமிழ்த் தேசியம் பேசும் தலைவர்களைத் தன் பக்கம் இழுக்கவே 'சுத்தத் தமிழர்' என்கிற வார்த்தையை இந்த இடத்தில் ரஜினி பயன்படுத்தியிருக்கலாம். 

தமிழக அரசியல் திக்கற்று கிடக்கிறது. மாலுமி இல்லாத அதிமுக அடுத்த தேர்தலில் தரைத் தட்டிவிடும். திமுக மட்டுமே பிரதான தனி பலம் வாய்ந்த கட்சியாகக் களத்தில் நிற்கும். திமுகவுக்கு சரியான போட்டியாளனாகத் தன்னை ரஜினிகாந்த் கருதிக்கொள்கிறார். அதற்கேற்றார் போலவே தமிழக அரசியல் களமும் அமைந்திருக்கிறது. தான் களமாட சரியான நேரம் இதுதான் என ரஜினி நினைத்திருக்கக் கூடும். தமிழ், தமிழர் என்று பேசும் தலைவர்களைத் தனது பாதையில் கிடக்கும் முதல் தடைகற்களாக அவர் பார்க்கிறார். 

அதனால், தமிழ் ஆர்வலர் தலைவர்களுக்குத் தன் மீது ஒரு சாஃப்ட் கார்னரை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்தப் பாராட்டு. எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் 'நல்ல வார்த்தை' உறவுக்கு வழி வகுக்கும் என்பது தந்திரசாலிகளுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்? பாராட்டி வைப்போம் பிற்காலத்தில் பலன் அளிக்கும் என்பதும் ஓர் அரசியல் மூவ்தானே. ஆனால், அதற்கு சீமானும் திருமாவளவனும் அன்புமணியும் மயங்குவார்களா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close