Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'துரோகிகளுக்காக நடத்தப்படும் வைரவிழா' : பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன், 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, வைரவிழா நடைபெற இருக்கிறது. 

Pon Radhakrishnan


இந்த விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட, ஆறு மாநில முதல்வர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதற்கிடையே, 'மருத்துவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே, இந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்வார்' என்று ஸ்டாலின் இன்று கூறியிருக்கிறார்.


இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா, அரசியல் ஆதாயத்துக்கானது. இது, தமிழர்களுக்குத் துரோகம் செய்தோர்களை அழைத்து நடத்தப்படும் வைர விழா' என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close