Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகத்துக்குத் தேவை ஆக்டர் அல்ல, டாக்டர்'... : அன்புமணி ராமதாஸ் அதிரடி!

பாட்டாளி மக்கள் கட்சியின் மது வணிகம் ஒழிப்பு பாராட்டு விழா பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. இதில், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "இப்போது நடக்கக்கூடியது ஆண்மையில்லாத ஆட்சி. பா.ம.க ஆட்சியமைத்திருந்தால், இன்று மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடத் தேவையில்லை. தமிழ்நாட்டில் எத்தனை ஏரிகள், குளங்கள் இருந்தன, இருக்கின்றன  என்பது ஸ்டாலினுக்குத் தெரியுமா? தூர் வாருவது போல ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறார்.


தமிழகத்தில், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் காலாவதியாகிவிட்டன. தமிழ்நாட்டில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதுக்கு முதலில் குரல் கொடுப்பவர் ராமதாஸ்தான். கடந்த ஆண்டு மே 19, தேர்தல் முடிவுகள் வந்த நாள். மீண்டும் ஊழல் ஆட்சி வந்த நாள்.

Anbumani Ramadoss


நிர்வாகத் திறமையில்லாத ஆட்சி. 100 முறை அமைச்சர்களை மாற்றியமைத்த ஆட்சி. முதல்வர் ஊழலுக்குச் சிறை சென்ற ஆட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், 21-ம் தேதி ஒரு கையெழுத்தைப் போட்டு மதுவிலக்கைக் கொண்டுவந்திருப்போம். தி.மு.க,  அ.தி.மு.க இரண்டையும் ஒதுக்குங்கள். அப்போதுதான் நீங்க, உங்க பசங்க எல்லாரும் நல்லாயிருப்பீங்க.


ரஜினியும், ஸ்டாலினும் என்னுடைய நண்பர்கள்தான். நட்பு வேறு அரசியல் வேறு. 50 ஆண்டுகளாக நடிகர்கள் ஆட்சி நடைபெற்றது. காரணம், மக்கள் சாதாரணமாக இருந்தார்கள். தமிழ்நாட்டுக்குத் தேவை, ஆக்டர் அல்ல டாக்டர்" என்றார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close