Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - ஆறு பேர் சஸ்பெண்ட்!

 14-ம் தேதி, சென்னையிலிருந்து ஈரோடு வரை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதையடுத்து, அரக்கோணம் ரயில் நிலைய அலுவலர் உள்பட ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்காடு எக்ஸ்பிரஸ்

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நுழையும்போது, எஞ்சின்  உள்பட மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து, 500–க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு, தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்டு, தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினார்கள். விபத்துகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நவீன்குலாதி விசாரணை நடத்திவந்தார்.

அதைத்தொடர்ந்து, அரக்கோணம் ரயில் நிலைய அலுவலர் (ஸ்டே‌ஷன் மாஸ்டர்) பன்னீர்செல்வம், ஏற்காடு எக்ஸ்பிரஸ் என்ஜின் டிரைவர் மோகன், உதவி டிரைவர் ஜெயபிரதாபன், கார்டு ஸ்ரீதர், கிழக்குப் பகுதி சிக்னல் பிரிவு பொறியாளர் நரேஷ்குமார், பொறியாளர் சிம்மையா ஆகிய ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து, ரெயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close