Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஐடி கம்பெனிகளின் அற மீறலைத் தடுக்க வேண்டும்!' - ராமதாஸ் அறிக்கை!

'முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அழைத்துப் பேசி, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணி நீக்கத்தைத் தடுக்க வேண்டும்' என, பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நடைமுறைக்கு வந்துள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இதுவரை இல்லாத எண்ணிக்கையில் ஆள் குறைப்பில் ஈடுபட்டிருக்கின்றன. காக்னிஸன்ட் நிறுவனம், இந்தியாவில் மட்டும் 55,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் ஏற்கெனவே நீக்கப்பட்டுள்ளனர். பணி நீக்க நடவடிக்கை தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும்  குறைந்தது 10,000 பேர் வேலை இழப்பார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

40 வயதைக் கடந்த மூத்த பணி நிலையில் இருந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு வேறு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இளம் வயதில் அவர்கள் உழைத்த உழைப்பைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்கி, அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதுதான் அறம். மாறாக, பணியாளர்களின் திறமைகளையும் சக்தியையும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அவர்களைச் சக்கையாக வீசி எறிகின்றன. எந்த வகையிலும் ஏற்க முடியாத இந்த அறமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இதே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அங்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் நேரடியாகச் சென்று, சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அழைத்துப் பேசி, ஒரு தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கூட பணி நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close