Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம்

rajini

சென்னையில் கடந்த சில தினங்களாக, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்துவருகிறார். நேற்று, தனது அரசியல் வருகை குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்புவதைப் பற்றி குறிப்பிட்டு, 'ஏன் இவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள்?' என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் பேசியதைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், சென்னை அம்பத்தூரில் போராட்டம் நடத்தப்பட்டது. போலீஸாரும் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். எதிர்பாராத விதமாக ரஜினியின் உருவ பொம்மையை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் எரித்தனர். மேலும், 'ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரஜினியின் வீடு முற்றுகையிடப்படும்' என்றும் தெரிவித்தனர்.

Powered By Tamil Flash News 

ரஜினி அரசியலுக்கு வருவாரா..? உடனடி அப்டேட்ஸ் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில்!

இன்ஸ்டால் செய்ய க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close