Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி விஜயகாந்த்தின் கருத்து..!

'உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும்' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா ஆகியோர், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணியைப் பார்வையிடச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், 'அகழ்வாராய்ச்சிப் பணியைப் பார்வையிட வந்தேன். மதுரையில் பிறந்த எனக்கு, இந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்.

இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே ஆள முடியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாறிப்போய் உள்ளது. இரு அணிகளும் நான்கு ஆண்டுகளைக் கடத்துவது பற்றியே சிந்தனை செய்கின்றன. அவர்களுக்கு மக்களைப் பற்றிய அக்கறை இல்லை. விரைவில் ஆட்சி கலையும். தேர்தல் நடைபெறும்.  ஓர் ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர் என்ற நிலை தமிழ்நாட்டில்தான் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே கூட்டணிகுறித்து முடிவுசெய்யப்படும்' என்றார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close