Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி பூச்சி மருந்து தொழிற்சாலையில் தீவிபத்து.. 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் நாசம்!

திருச்சியில் பூச்சி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான  பொருட்கள் நாசமானது. காற்றில் மருந்து கலந்ததால் பொதுமக்கள் மூச்சுத் திணறிய சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

trichy fire

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சிவா எண்டர்பிரைசஸ் என்னும் பெயரில் பூச்சிக் கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கு உள்ளது. கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தும், இங்குள்ள குடோனில் இருந்துதான் சுற்றுவட்டாரக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
 
மேலும் இங்கு அரிசி, இரும்பு, பெயின்ட்  உள்ளிட்ட பல்வேறு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்புக் கிடங்கில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில், தீ மளமளவென பற்றி எரிந்து, சேமிப்புக் கிடங்குக்குள் இருந்த பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில்கள் பற்றி எரியத் துவங்கின. இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 5 வாகனங்களில் விரைந்து வந்தனர் தீயணைப்பு வீரர்கள். 

பூச்சிக்கொல்லி மருந்துக் கிடங்கு தீப்பற்றியதால், காற்றில் நச்சுப் புகை கலந்து, கண் எரிச்சல், தொண்டை கரகரப்பை ஏற்படுத்தியதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் சேமிப்புக் கிடங்கிற்குள் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

trichy fire2
 

விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத்துக்கான விதை நெல், உரம், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கிடங்கு  செயல்பட்டு வந்தது என்பதும், இந்த தீவிபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீவிபத்தால், கிடங்கில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வெளியேறியதால், சுவாசக் கோளாறு ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close