Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செங்கோட்டையன் அளித்துள்ள வாக்குறுதி!

அரசுப் பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Sengottaiyan
 

அண்மையில், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், பொதுத் தேர்வுகளுக்கு இனி ரேங்க்கிங் முறை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி இந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. மேலும்  11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்னும் முக்கிய அறிவிப்பை செங்கோட்டையன் வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இன்று திருசெங்கோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய செங்கோட்டையன் ‘அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்பட உள்ளன. மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.   நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close