Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜெ., மரணத்தின் பின்னணியில் ஓ.பி.எஸ், சசிகலா கூட்டுச்சதி’.. அதிரவைக்கும் அதிமுக தொண்டர்கள் அணி! 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மரணத்தின் பின்னணியில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் கூட்டுச்சதி இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் அணி சார்பில் காவல்நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Jaya death conspiracy
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடியதால் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி  தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணி ஒன்று உருவானது. அ.தி.மு.க அணி தொண்டர்களுக்கே சொந்தம் என்ற கொள்கையை மும்மொழிந்து இந்த புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அ.தி.மு.க தொண்டர்கள் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்று புகார் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த புகார் மனுவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முன்னுக்குப் பின் முரணான பல்வேறு கருத்துகளை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், மதுசூதனன், வளர்மதி உள்ளிட்டவர்கள் கூறினர். முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் இருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'ஜெ., மரணம் தொடர்பாக முதலில் ஓ.பன்னீர்செல்வத்தைதான் விசாரிக்க வேண்டும்' என்றார்.  

ஓ.பி.எஸ், சசிகலா, விஜயபாஸ்கர் அவர்களின் செயல்பாடுகள் ஜெயலலிதாவை இயற்கைக்கு மாறாக மரணம் விளைவிக்கின்ற வகையில் ஏதோ சூழ்ச்சி செய்து, கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றேன். குறுக்கு வழியில் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றவே இவர்கள் இப்படி செய்துள்ளனர். இந்த கொலைக்கு தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 127 பேரும் உடந்தை’ இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close