Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூன் 1ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் : பி.ஆர்.பாண்டியன்

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு காவிரி பிரச்னையில், மத்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்ததால் 400 விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணமடைந்துள்ளனர். குடிநீரின்றி பரிதவிக்கும்போது, 2,000 கன அடி தண்ணீரை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், மத்திய அரசு பெற்று தர மறுத்து விட்டது.

PR Pandiyan

மீனவர்கள், நீட் தேர்வுகள் உள்ளிட்ட பிரச்னைகளில், தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதால், தமிழகம் இந்திய வரைப்படத்தில் உள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. இந்தாண்டும் ஜூன் 12-ல் தண்ணீர் பெற்றுத் தருவதற்கான வகையில், மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை.


இதனால் தமிழக விவசாயிகள், விவசாயத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதற்கு அனைத்து இயக்கங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close