Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இது நடந்தால் இரு அணிகள் இணைவதில் பிரச்னை இல்லை' : பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவருமான பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியாக அவர் கூறினார். அதேபோல், தேர்தல் ஆணையரையும் அவர் சந்தித்தார்.

Panneerselvam


இந்நிலையில், இன்று காலை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானப் பிறகு, பி.ஜே.பி உடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ட்வீட்டினார். பின்னர், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று ட்வீட்டினார். 


குறிப்பாக, பி.ஜே.பி கூட்டணி குறித்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லி சென்ற பன்னீர்செல்வம், இன்று மாலை சென்னை திரும்பினார். 


சென்னை விமான நிலையத்தில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  "தமிழக மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மோடியிடம், அரசியல் குறித்து பேசவில்லை. எங்களது, கோரிக்கைகளை நிறைவேற்றினால் இரு அணிகள் இணைவதில் எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close