Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Alert 'வட தமிழகத்தில் இயல்பை விட 5 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தும்'..!

தமிழகத்தின் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, கடந்த வாரம் சென்னையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு வெயில் வாட்டி வதைத்தது. அதேபோல், மதுரை, திருச்சி, சேலம்,வேலூர், திருத்தணி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், 100 ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது. 

Heat


இந்நிலையில், "அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய  மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் வட தமிழகத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். முக்கியமாக, வட தமிழகத்தில், சராசரி அளவை விட 4 முதல் 5 டிகிரிக்கு, வெயிலின் அளவு கூடுதலாக இருக்கும்.


சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக , 31 டிகிரி செல்சியஸ் பதிவாகும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக  மதுரை தெற்கு, ஏற்காடு, தர்மபுரி,  நடுவட்டம் (நீலகிரி) மற்றும் திண்டுக்கல்லில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close