Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நினைவேந்தல் : திருமுருகன் காந்தி, வேல்முருகன், இயக்குநர் கவுதமன் கைது!

சென்னை, மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், இயக்குநர் கவுதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. 

Thirumurugan
 

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் சார்பில், மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே மெரினா கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்தது. குறிப்பாக, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை நேற்று கூறியது. மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

may17
 

திட்டமிட்டபடி, இன்று மாலை 5 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறினார். ’நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். சிறை செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையுமில்லை. தடியடியை எதிர்கொள்ளவும் தயராக உள்ளோம். நிச்சயம் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இன்று மெரினாவில் ஒன்று கூடுவோம்’ என்று திருமுருகன் தெரிவித்தார்.

திருமுருகன் கூறியப்படி இன்று மாலை நினைவேந்தல் கூட்டம் நடத்த முயற்சித்தார். இதனைத் தொடர்ந்து தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், இயக்குநர் கவுதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வருகிறது. 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close