Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையிலிருக்கும் வைகோ 50 நாள்களுக்குப் பின் ஜாமீன் கோரி மனுத்தாக்கல்!

தேசத்துரோக வழக்கில் சிறையிலிருக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வைகோ


2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழீழப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வைகோவுக்குச் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி, 15 நாள்கள் காவல் முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், தான் பிணையில் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்ததால், காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ. இதனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவின் காவலை ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல்செய்துள்ளார். 50 நாள்களுக்கு மேல் வைகோ சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close