Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிம்பளம் வாங்கும் அதிகாரிகள்.. புகார் கூறும் ஊழியர்கள்..! - போக்குவரத்துத் துறை ’கப்சிப்'

போக்குவரத்துறை அதிகாரிகள் ஊழல் செய்வதாகவும் துறை வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்

ரசுப் போக்குவரத்துக் கழகத்தில், தகுதியற்ற அதிகாரிகள் இருப்பதாக ஊழியர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்துப் பேசிய ஊழியர்கள் ஒன்றியத் தலைவர் ஆறுமுக நயினார், ''அரசுப் போக்குவரத்துக் கழகம், தேவையற்ற அதிகாரிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் துறை என்பதைவிட, தகுதியற்ற அதிகாரிகள் அதிகம் இருக்கும் துறை. போக்குவரத்துக் கழகத்தில், அதிகபட்ச அதிகாரம் நிர்வாக இயக்குநருக்குத்தான் உண்டு. ஆனால், இயக்குநரோ, ஆளும் கட்சித் தரப்புடன் இணைந்து கொண்டு, ஊழியர்கள் நியமனம் முதல் பேருந்துகளுக்கான உதிரிப் பாகங்கள் வாங்குவது வரை அனைத்திலும் ஊழல் செய்கிறார்” என்று புகார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ''கழகத்தில், யாரையும் வேலைக்குச் சேர்க்கும் அதிகாரம் பொது மேலாளருக்கு இருக்கிறது. அவர் நியமனம் செய்வதில், எவ்விதமான மாற்றும் கிடையாது. ஆனால், ஊழியர்கள் நியமனம் நேர்மையான முறையில் நடைபெறுவது இல்லை. தமிழகம் முழுவதும் முந்நூறு பணிமனைகள் இருக்கின்றன என்றால், அதில் 5,000 பேர் வேலை பார்க்காமல்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஊழல்களையும், தேவையற்று சம்பளம் தந்துகொண்டிருப்பதையும் சரிசெய்தாலே 150 கோடி வரை இழப்புகளை தவிர்க்கலாம். மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தினமும் ஒரு பேருந்துக்கு 1,500 பேர் வரை பயணிக்கிறார்கள். 4,000 முதல் 5,000 வரை அதில் கலெக்‌ஷன் கிடைக்கும். இதில்தான் சம்பளம் தொடங்கி பேருந்து பராமரிப்பு வரை செலவு செய்யவேண்டும். ஆனால், பேருந்து டீசலுக்கு மட்டுமே 50 சதவிகிதம் செலவாகிவிடும். இதில் எங்கே பேருந்து பராமரிப்பு என்று தனியாக செலவு செய்ய முடியும்? அதிகாரிகள் இருந்தும், பிரச்னைகளை சரிசெய்யாமல், வெறுமனே சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு இருப்பதால்தான் வருமானம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது  போக்குவரத்துத் துறை''  என்று  பிரச்னைகளை அடுக்கி முடித்தார்.

பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

மக்கள் புழங்கும் ஒரு சேவைத் துறையில், இப்படியொரு புகார் எழுந்துள்ளது குறித்து அதிகாரிகள் தரப்பிடம் பேசியபோது, "இரண்டு நாள்கள் கழித்து அழைக்கவும்!” என்று மட்டும் பதில் கிடைத்தது. துறையின் வருமானம் குறித்த கேள்வி ஒருபக்கம் இருந்தாலும்... பணிமனையில், பழுதுபார்க்கப்படாமல் கிடக்கும் பேருந்துகளையும், அரைகுறையாகப் பழுதுபார்க்கப்படும் பேருந்துகளையும் சரிவரப் பராமரித்தாலே பேருந்துகளில் மக்கள் நெருக்கடியைக் கணிசமான அளவில் குறைக்கமுடியும்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close