Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசு எதிர்க்கவில்லை! 53 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளியே வருகிறார் வைகோ

vaiko

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஜாமீன் அளித்தது சென்னை நீதிமன்றம். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியிருந்தார் வைகோ. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, அவர்மீது தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து மூன்று முறை அவரிடம், ஜாமீனில் வெளியே செல்கிறீர்களா என நீதிபதி கேட்டும் மறுத்துவந்தார் வைகோ. இந்நிலையில், நேற்று அவர், ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். இன்று, அந்த மனுமீதான விசாரணையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் அளித்தது. ஜாமீன் தொடர்பாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த 53 நாள்களாக சிறைவாசம் அனுபவித்த வைகோ, வெளியே வரவிருக்கிறார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close