Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி! முதல்வர் பழனிசாமி உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கவும், பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாகவும், 4,900 மெட்ரிக் டன் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ள தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில்,  இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான அனுமதியை வழங்க, 9.11.2001 அன்று ஆணையிட்டார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதன்படி, பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது, இஸ்லாமியப் பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து முதல்வருக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இக்கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக, மொத்த அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆவணங்களை உரிய ஆய்வு செய்து, பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 4,900 மெட்ரிக் டன் அரிசிக்கான மொத்த அனுமதி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதன்மூலம், மாநிலம் முழுவதும்  உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயனடையும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close