Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகரிக்கும் நெருக்கடி! ஈஷா யோகா மையம் மீது தமிழக அரசு புகார்

ஈஷா யோகா மையம்

ஈஷா யோகா மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலிஅளவு அதிகமாக இருந்தது என்ற தகவலை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

ஈஷா யோகா மையம் சார்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் மகாசிவராத்திரி நிகழ்ச்சி நடைபெற்றது. பலத்த எதிர்ப்புகளுக்கும் இடையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவுக்கு வந்து, 'ஆதியோகி' சிலையை திறந்து வைத்தார். இரவு முழுவதும் நடந்த இந்த விழாவில், அதிக ஒலி எழுப்பக்கூடிய இசைக்கருவிகளும், ஒலிப் பெருக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதி மற்றும் யானைகள் உலவும் இடத்தில் இப்படியான நிகழ்வுகளை நடத்தக்கூடாதென தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவர் தொடுத்த வழக்கில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில், ஈஷா மையம் அமைந்துள்ள இடத்தில் ஒலியின் அளவு பகல் நேரத்தில் 55 டெசிபலும், இரவு நேரத்தில் 45 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் மகாசிவராத்திரி நிகழ்வு நடைபெற்ற பிப்ரவரி 24ஆம் தேதி, எட்டு இடங்களில் எடுக்கப்பட்ட அளவுகளும் இந்த அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட அதிகமாகத்தான் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளருக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஏப்ரல் 7 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜுலை மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close