Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர்செல்வம் கோயம்புத்தூர் சென்ற காரணம் இதுதான்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக கோயம்புத்ததூர் சென்றுள்ளார்.


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்புவிடுத்தார். மேலும், பிரதமர் மோடியைச் சந்தித்த பின் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்த தனது கருத்தையும் மறைமுகமாக வெளிப்படுத்தினார். இந்நிலையில், இன்று காலையில் சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து, அவர் இன்று மாலையில் விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றார். அவர் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சென்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. வழக்கமாக செய்தியாளர்களைச் சந்திக்கும் பன்னீர்செல்வம், இன்று அவர்களைச் சந்திப்பதைப் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close