Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி வேண்டாம்... சசிகலாதான் வேண்டும்..! பா.ஜ.க-வுக்கு சுப்ரமணியன் சுவாமி அட்வைஸ்

ரசிகர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பின், ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவரது பேச்சு, அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 'ரஜினியை வரவேற்க பா.ஜ.க கதவு திறந்தே இருக்கிறது' என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார். பா.ஜ.க-வுக்கு போகக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட சில தமிழகத் தலைவர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சுப்ரமணியன் சுவாமி


இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்துவரும் பா.ஜ.க எம்பி., சுப்ரமணியன் சுவாமி, "ரஜினிக்கு அரசியலமைப்பு பற்றி எதுவும் தெரியாது. அவருக்குத் தெரிந்த சினிமா தொழிலில் இருப்பதே அவருக்கு நல்லது' என்று கூறி இருந்தார். இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், ''இப்போதும் சொல்கிறேன். சினிமா நட்சத்திரங்கள் பின்னால் பா.ஜ.க செல்வதைவிட, சசிகலா தலைமையிலான அ.தி.மு.க-வை பா.ஜ.க கூட்டணிக்கு அழைக்க வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துள்ள நிலையில், சுவாமியின் இந்த அழைப்பு, பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ரஜினியை அரசியலுக்குள் கொண்டுவந்து ஜெயிப்பது என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அந்தக் கொக்கை பிடிப்பது போலத்தான். இப்போது அதிகாரத்தில் இருக்கும் சசிகலா கட்சியை பா.ஜ.க கூட்டணிக்குள் கொண்டுவந்தால்தான், அரசியல்ரீதியாக தமிழகத்தில் நிறைய காரியங்களைச் சாதிக்க முடியும். தமிழக பா.ஜ.க வளர்ச்சிக்கு அதுதான் முக்கியம்" என்று சொன்னார்கள்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close