Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெ., படம் திறப்பு; எம்.ஜி.ஆர். விழா' மோடிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி

அ.தி.மு.க அணியில், எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க  அரசுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரை சென்னைக்கு வருமாறு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக, அவருக்கு தனித்தனியாக இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்.

எடப்பாடி

அதில், 'ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். அவ்விழாவை, ஜூலை மாதம் வைக்கலாம் என முடிவுசெய்துள்ளோம். இந்த மாதத்தில், தங்களுக்கு சௌகரியமாக இருக்கும் ஒரு தேதியை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொள்கிறோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறோம். டிசம்பர் 15-ம் தேதியில் இருந்து      31-ம் தேதிக்குள் விழா எடுக்க இருக்கிறோம். அந்த நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். விழாவில், 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தாங்கள் வந்து, விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்'' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி, பிரதமர் மோடியை சென்னைக்கு வரவழைக்க அ.தி.மு.க அரசு சார்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close