Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரில் மோதிய குஷ்பு, தமிழிசை..!

நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டரில், ''தமிழிசை சௌந்தரராஜனின் அறிக்கையைப் படித்தேன். ஒருவர், கட்சியின் கொள்கையைப் பார்த்து தங்களது சொந்த விருப்பத்தின் பெயரில் அதில் சேரவேண்டும். ஆனால், நீங்கள் ரஜினிகாந்த்திடம் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். 


என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் காங்கிரஸில் இணைந்தேன் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று கூறினார்.


இதற்குப் பதிலளித்த தமிழிசை, "தங்களைச் சேர்க்க, காங்கிரஸிலிருந்து யாரும் அழைக்கவில்லை. ஆனால், தங்களை தி.மு.க-விலிருந்து துரத்துபவர்கள் இருந்தார்களே" என்றார். மேலும், "நீங்கள் காங்கிரஸில் சேர்ந்தீர்களா... அல்லது தாவினீர்களா? தி.மு.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்ததா சிறந்த கொள்கை?" என்ற அவர், "ஆனால் எந்தக் கொள்கையின் அடிப்படையில் சேர்ந்தீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்று கூறினார். 

 


இதற்கு குஷ்பு,  "உங்களது மூளையைக் கொஞ்சமாவது பயன்படுத்துங்கள். நான் தி.மு.க-விலிருந்து விலகி ஆறு மாதங்களுக்குப் பிறகுதான், காங்கிரஸில் இணைந்தேன். நான், தி.மு.க-விலிருந்து விலகினேன் என்று தெரிந்திருக்க, நீங்கள் என் உதவியாளரும் இல்லை மக்கள் தொடர்பாளரும் இல்லை" என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close