Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிகாந்த்தை விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் பல்டி!

இரண்டு நாள்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துப் பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இன்று திடீரென பல்டி அடித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ரசிகர்களைச் சந்திக்காமல் இருந்த ரஜினிகாந்த், கடந்த வாரம் சந்தித்துப் புகைப்படும் எடுத்துக்கொண்டார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்து நாள்கள் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததோடு, தமிழக அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய்க் கிடக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு, அரசியல் கட்சியினரை அதிரவைத்தது.

கடந்த 22ஆம் தேதி, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, "ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்துவிட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

ரஜினியை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து ஐந்து நாள்கள் முடிந்தநிலையில், திடீரென பல்டி அடித்து, ரஜினியைப் புகழ்ந்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன்தான். ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் அரசமைப்பு சரியாகவே உள்ளது. ஸ்டாலின் என்றும் ஜெயலலிதா இடத்தை பிடிக்க முடியாது. ஜெயலலிதா குறித்து அவதூறாக பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close