Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ்1, பிளஸ்2வில் செமஸ்டர் தேர்வுமுறை! தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

பட்ட வகுப்பில் இருப்பதுபோல இருபருவத் தேர்வுமுறையை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அறிமுகப்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அந்த சீர்திருத்தங்களின் ஓர் அங்கமாக பிளஸ்1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் சுமையை அதிகரிப்பதாக உள்ளது. எனவே பொதுத்தேர்வுக்குப் பதிலாக இருபருவத் தேர்வுமுறையை (semester) நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் பிளஸ் 2 பாடங்களையே நடத்திவந்தன. அதனால் உயர்கல்வி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவேதான் பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன்வைக்கப்பட்டது. அதில் நியாயம் இருந்தாலும் அது மாணவர்களின் தேர்வுச் சுமையை அதிகரித்து மன அழுத்தத்துக்கு அவர்களை ஆளாக்கிவிடும் என்பதால் பட்ட வகுப்பில் இருப்பதுபோல இருபருவத் தேர்வுமுறையை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அறிமுகப்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பள்ளிக் கல்வியின் பகுதியாக பள்ளிகளில் இடைநிறுத்தத்துக்கு முதன்மையான காரணம் நமது தேர்வுமுறைதான். தரம் தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வுமுறை அமைக்கப்பட்டுள்ளது. மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் இப்போதைய தேர்வுமுறை மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழாக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்விபயிலும் மாணவர்கள், வாழ்க்கையின் எந்தவொரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக, எல்லாவற்றுக்கும் ஆயத்தமான, முன்பே தயாரிக்கப்பட்ட தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்தச் சார்பு மனோநிலை மாணவர்களைத் தற்சார்பு அற்றவர்களாக்கிவிடுகிறது.

இந்தத் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவந்து பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்வியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கேற்ப நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும். ஒரு நாட்டின் வளங்களிலேயே மிகவும் சிறந்தது மனிதவளம்தான். அதைப் புரிந்துகொண்ட நாடுதான் முன்னேறும். எனவே பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு ஒத்திசைவான முறையில் உயர்கல்வித்துறையிலும் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close