Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் பால் நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்!

பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்பதை தனியார் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

rajendra

தனியார் பால் நிறுவனம் ஒன்றின் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகாரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து,  'பொதுமக்கள் குடிக்கும் பாலில் யாராவது கலப்படம் செய்வது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், கலப்படம் செய்ததாகப் புகார் கூறப்பட்ட பால் மாதிரி புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 'பாலில் ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பெருவாரியான தனியார் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் கலக்கிறார்கள். கெட்டுப்போனால்தான் பால், இல்லையேல் அது ரசாயனம்' என அவர் கூறியுள்ளார். மேலும் தனியார் பால் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் எச்சரித்துள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close