Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடும் இருளர் இன மாணவர்கள்!

அரசாணைப்படி சாதிச் சான்றிதழ் வழங்காத வருவாய்த் துறையைக் கண்டித்து விழுப்புரத்தில் இருளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் 109 இருளர் இன மாணவர்கள் 10,11 மற்றும் 12-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாவட்ட வருவாய்த்துறை இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் அளிக்காததால் இவர்களின் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் இன்னும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால் இன்று காலையிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள நகராட்சி மைதானத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக் களத்தில் இருந்த பேராசிரியர் பிரபா.கல்விமணியிடம் பேசினோம், “கடந்த 5.6.2012-ல் வெளியிடப்பட்ட வருவாய்த்துறை அரசாணை எண் 184-ன்படி 2012-13 கல்வியாண்டிலிருந்து அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் 6-வது வகுப்பிலிருந்தே சாதிச் சான்று, வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பழங்குடியின மக்களுக்கு இருப்பிடச் சான்றும், வருவாய்ச் சான்றும் வழங்கப்படுகின்றன. ஆனால், சாதிச் சான்று மட்டும் வழங்கப்படவில்லை. அரசு எடுத்த முயற்சியால் படிப்பதற்காக முதல் தலைமுறை பிள்ளைகள் வருகிறார்கள். அப்படி வந்தும் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறார்கள் அதிகாரிகள். இன்னும் ஒருவாரத்தில் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் அவர்களால் எப்படி மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கவும் படிக்கவும் முடியும்? அதனால் இவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து  உடனே சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறோம்” என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close