Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், ராஜ் பவனுக்கு விரைந்த கிரிஜா வைத்தியநாதன்..!

girija

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று மாலை சந்தித்துப் பேசினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நான்காவது முறையாக நடைபெற்றது இந்த அமைச்சரவைக் கூட்டம். நீட் தேர்வு விவகாரம், விவசாயிகள் பிரச்னை, டாஸ்மாக் கடைகள் அகற்றம், சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் நிறைவடைந்த சில மணி நேரங்களில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்திக்க ராஜ் பவனுக்கு விரைந்தார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்டறிந்ததாகக் கூறப்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close