Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''அமைச்சர் பதவி வேண்டும்..!'' முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிரவைத்த எம்.எல்.ஏ.!

தமிழ்ச்செல்வன் அதிமுக எம்.எல்.ஏ

முதலமைச்சர் பழனிசாமியைப் பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் இன்று (25-05-17) சந்தித்துப் பேசினார். அப்போது, மூன்று அமைச்சர்கள் பதவி கேட்டு 20 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்துப் பெற்ற கோப்புகளை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய கோஷ்டிப்பூசல் இன்றளவும் ஏதோ ஒரு ரூபத்தில் பல கோஷ்டிகளாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், கடந்த வாரம் தோப்பு வெங்கடாசலம், ''சட்டமன்றத்தைக் கூட்டவேண்டும்'' என்று எட்டு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் முதல்வரைச் சந்தித்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தலித் எம்.எல்.ஏ-க்கள் 20 பேரைச் சேர்த்துக்கொண்டு முதல்வர் எடப்பாடியைச் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஏன் முதல்வரைச் சந்தித்தனர், அவர்களின் கோரிக்கை என்ன என்று சில தலித் எம்.எல்.ஏ-க்களிடம் பேசினோம். அவர்கள் அடையாளங்களை மறைத்து நம்மிடம் பேசினர்.

"அ.தி.மு.க-வில் எஸ்.சி., எஸ்.டி. என 33 தலித் எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில் ஊத்தங்கரை மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் மனோகரன், சோழவந்தான் மாணிக்கம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்களும் ஓ.பி.எஸ் அணியில் உள்ளனர். மற்ற 30 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடியின் அ.தி.மு.க அம்மா அணியில் இருக்கிறார்கள். மற்ற சமுதாய எம்.எல்.ஏ-க்கள் அவர்களது சாதியை மையப்படுத்தி முக்கியப் பதவிகளை வகித்துவருகிறார்கள். ஆனால், தலித் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. இந்தநிலையில் தலித் சமுதாயம் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காக பெரம்பலூர் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் 33 எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அதன் பெயரில் கடந்த 25.4.17-ம் தேதியன்று சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். கூட்டத்துக்கு 12 எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய இளம்பை தமிழ்ச்செல்வன், 'மாற்றுச் சமுதாயத்தினர் அவர்கள் சாதிப் பலத்தைக் காட்டி பெரியபெரிய இடத்துக்கு வந்துவிட்டார்கள். நாமும் வரவேண்டாமா? நாம் இதுவரையில் நாளோடு ஐந்தாகத்தான் இருந்து வந்தோம். இனிமேல் இப்படி இருக்கக்கூடாது. நாமும் நமது பலத்தைக் காட்டவேண்டும். நாம் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே சமுதாயத்தை முன்னேற்ற முடியும். இரு அணிகளும் ஒன்றாக இணையும்போது, அமைச்சரவையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதில் கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர் என உயர் சாதியினருக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார்கள். அதற்குள் நாம் ஒன்றுகூடி நமது பலத்தைக் காட்டவேண்டும்' என்றார். அதன்படி, ஒரு முடிவுடன் அங்கிருந்து புறப்பட்டோம். கூட்டத்துக்கு வராத எம்.எல்.ஏ-க்களிடமும் இதுபற்றி இளம்பை தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார். அதன்பெயரில் எட்டு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு எங்களுக்குக் கிடைத்துள்ளது. மொத்தம் 20 எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்துப் பெற்ற கோப்புகளை இன்று முதல்வரைச் சந்தித்து கொடுத்துவிட்டு, 'நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எங்களுக்கு மூன்று அமைச்சர்கள் பதவி கொடுத்தால் எங்கள் சமுதாய மக்களின் தரம் மேம்படும்' என்று கோரிக்கைவைத்துள்ளோம். அவரும் நல்ல பதில் சொல்வதாகச் சொன்னார். நாங்கள் அமைச்சர் பதவி வாங்க வேண்டும் என்பதற்காக ஒன்றுசேரவில்லை. பலவருடங்களாக தலித் மக்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி எடுத்துச்சொல்ல வழுவான அமைச்சர்கள் இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கூட்டம் நடத்தியுள்ளோம். இதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்று பல அதிகாரிகள் எங்கள் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தவண்ணமாக இருக்கிறார்கள். எடப்பாடி அரசு எங்களைப் புறக்கணித்தால் நாங்கள் அடுத்தகட்ட முடிவுக்கு செல்வோம்" என்று முடித்தார்கள் அவர்கள்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close