Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமி அரசின் 100 -வது நாள்! சாதனை மலரை அவரே வெளியிட்டார்

தனது அரசின் 100 நாள் சாதனை மலரை, முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். குறும்படங்கள், பாடல்கள், மற்றும் முதல்வரின் உரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராகப் பதவியில் அமர சசிகலா முடிவுசெய்தார். இதையடுத்து, முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமாசெய்தார். பின்னர், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதைத்தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்,  பழனிசாமி முதல்வராகப் பதவியேற்று நேற்றுடன் 100 நாள்கள் கடந்த நிலையில், அவருடைய ஆட்சிக் காலத்தின் சாதனைகுறித்து விளக்கும் 'சாதனை மலர்' இன்று வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலரை வெளியிட, அதன் முதல் பிரதியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். மேலும், குறும்படங்கள், பாடல்கள், மற்றும் முதல்வரின் உரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்ற 114 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி வழங்கினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close