Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதக்கம் வென்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் பரிசு!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  இன்று தலைமைச் செயலகத்தில், பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 72 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்றுநர்கள் ஆகியோருக்கு, 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். 

edappadi palanisamy
 

2016ஆம் ஆண்டு, குஜராத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபாடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற, இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் சேரலாதனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு, பிரேஸிலில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் பயிற்றுநரான சத்தியநாராயணாவுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுபோன்று, வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்றுநர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், முனைவர் ராஜேந்திர குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் அஷோக் டோங்ரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close