Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம் !

தமிழக அரசு, நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முகமது ஹனீஃபா, வனிதா, பாஸ்கரன்,  தீபக் எம். தாமோர் ஆகியோர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IPS transfer

வேலூர் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த முகமது ஹனிஃபா சென்னை கடலோரக் காவல்படைக்கும், கடலோர காவல்படையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி வனிதாவை ரயில்வே டிஐஜி-யாகவும் நியமித்துள்ளனர். ரயில்வே டிஐஜி-யாக இருந்த பாஸ்கரன், வேலூர் சிறைத்துறை டிஐஜி-யாகவும், கோவை டிஐஜி-யாக இருந்த தீபக் எம்.தாமோர், திருச்சி ஆயுதப்படை டிஐஜி-யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பணியிட மாற்ற உத்தரவு, உடனடியாக அமலுக்குவருகிறது. 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close