Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகப் புகழ் ’மஹாராஜா’ சொகுசு ரயில் தமிழகம் வருகிறது: அதிரவைக்கும் டிக்கெட் விலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் உலகப் புகழ்பெற்ற ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயில், ஜூலை மாதம் தமிழகம் வரவுள்ளது.

மஹாராஜா எக்ஸ்பிரஸ்


வட இந்தியாவில், உள்நாட்டுப் பயணிகளுக்காக இயக்கப்பட்டுவரும் அதிநவீன சொகுசு ரயில்,  ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’. மும்பையிலிருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா என வட மாநிலங்களில் இயக்கப்பட்டுவந்த இந்த சொகுசு ரயில், முதன்முறையாக தென் இந்தியா வரவுள்ளது.


ஜூலை 1 ஆம் தேதி மும்பையிலிருந்து புறப்படும் மஹாராஜா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து காரைக்குடி, சென்னை, மைசூர், கோவா வழியாக மீண்டும் மும்பை திரும்பிவிடும். தங்கத்தட்டில் உணவுகள் பரிமாறப்படும் இந்த ரயிலில் பயணிக்க, முன்பதிவு துவங்கியுள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்கான முழுக் கட்டணம், 5,00,680 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டும் பயணம் செய்வோருக்கு, 50 சதவிகித கட்டணச் சலுகையுடன் ஒரு பயணச்சீட்டில் இருவர் பயணிக்கும் வசதியுள்ளது. அதற்கான கட்டணம், 33,050 ரூபாய் ஆகும்.

இந்தக் கட்டணம், எட்டு நாள்களுக்கு உணவு, இடையில் நட்சத்திர விடுதிகளில் தங்குவது, பேருந்துக் கட்டணம், சுற்றுலாத்தலங்களின் நுழைவுக் கட்டணம் என அத்தனையும் இதில் அடங்கும்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close