Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.கவின் உட்கட்சித் தேர்தல்...அவைத் தலைவராகிறார் பிரேமலதா!

தே.மு.தி.கவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவைத்தலைவராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரேம

ஒரே ஆண்டுக்குள், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மூன்றாவது முதல்வரை சந்தித்துள்ளது. கட்சிக்கு அவைத் தலைவர் யார், பொதுச் செயலாளர் யார் என்ற பஞ்சாயத்தை தேர்தல் ஆணையம் முடித்து வைத்த பின்னரே, உட்கட்சித் தேர்தலுக்கான வேலையில் அ.தி.மு.க தீவிரமாக இறங்கும் என தெரிகிறது. உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது எளிது என்பதால் சில மாதங்களுக்கு முன்  தி.மு.க அதை செய்து முடித்து விட்டது. 

கடந்த முறை தே.மு.தி.கவை எதிர்க்கட்சி அந்தஸ்துடன் நகர்த்திக் கொண்டு போன விஜயகாந்தும், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து உட்கட்சித் தேர்தலை முடிக்கும் வேகத்தில் களத்தில் இறங்கியுள்ளார். தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டொரு நாளில் கட்சியின் மாவட்ட, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள்  ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற அணிச்செயலாளர்கள் தேர்வு அனைத்தும் முடிந்து விடும். அநேகமாக கட்சியின்  அவைத்தலைவராக பிரேமலதா நியமனம் செய்யப்படலாம் என  தெரிகிறது" என்றார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close