Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்காக ஒரு தினம்! 

தேசிய அளவில் கொண்டாடப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தினத்தை கிருஷ்ணகிரியில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளனர். 

ambulance driver day

நேற்று தேசிய அளவில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23, அரசு ஆம்புலன்ஸ் வண்டிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 52 டிரைவர்கள் மற்றும் 58 மருத்துவ உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மே 26ல் டிரைவர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். 

இதை முன்னிட்டு நேற்று மதியம் 2:45 மணிக்கு, துணை இயக்குநர் டாக்டர் அசோக்குமார் தலைமையில், '108' ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். பின்னர், பொதுமக்களுக்கும் கேக் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அதிகாரி ராமன், ஒருங்கிணைப்பாளர் டைட்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close