Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமருடன் செல்பி, குலுக்கல் பரிசு... தமிழகத்தில் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி! 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2017 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டப்பணிகளை விளக்கும் வகையில் நாடெங்கும் கண்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சியில் அரசின் திட்டங்களும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெளிவுபடுத்த இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மோடி


தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 12 இடங்கள் உள்பட நாடெங்கும் 300 இடங்களில் இந்தக் கண்காட்சிகள் நடக்கின்றன. கண்காட்சியை வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12 மணி வாக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பார்கள். அதற்குப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற முன்னேற்றங்கள், சாதனைகள் இடம்பெறும். மக்கள் தங்கள் கருத்துகளை பிரதமருக்கு தெரிவித்தல். தனி நபர்களுக்கு தேவையான திட்டங்கள் பற்றிய விவரங்களை கணினி மூலம் பெறலாம், வினாடி வினா, பிரதமருடன் செல்பி, பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் வழிகாட்டுதல், நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், நாளைய செயலி தரவிறக்கம், குலுக்கல் பரிசு என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 2ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிறநகரங்களில் கண்காட்சி ஜூன் 9 ஆம் தேதி முதல் ஜூன் 18 ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close