Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த வரலாற்றுத் திட்டம்!

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த சுழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளளவை  அதிகப்படுத்திட தமிழக அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

METTUR DAM
 

வருங்காலத்தில் விவசாயப் பணிகளை மேம்படுத்திட, பயனீட்டாளர்களின் உதவியுடன்  பண்டைய குடிமராமத்து திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு முடிவுசெய்தது. ’குடிமராமத்து’ என்பது மக்கள் தங்கள் சொந்த உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதாகும். இந்த திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை மீளப் பெறும் சீரிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரியாற்றின் குறுக்கே 1925 ஆம் ஆண்டு தொடங்கி 1934 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

mettur dam
 

தற்போது மாநிலமெங்கும் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின்படி மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை செயல்படுத்தும் விதமாக, மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலதுகரைப் பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல்மண்ணில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மேட்டூர் அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளமும் அதிகரிக்கும்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close