Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசின் உத்தரவால் களையிழந்த தேவகோட்டை மாட்டுச் சந்தை!

மத்திய அரசு இரண்டு நாள்களுக்கு முன்னர் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தின்படி, 'யாரும் கால்நடைகளை  இறைச்சிக்காக விற்க சந்தைக்குக் கொண்டு வரக்கூடாது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர காரணங்களுக்காக கால்நடைகளை ஒருவர் சந்தைக்கு  கொண்டு வந்தால் அந்த கால்நடைக்கு சொந்தக்காரரின் பெயர், முகவரி, அடையாள ஆவணம் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

கால்நடையைப் பற்றிய அடையாளங்களை அவர் தெரிந்திருக்க வேண்டும்.

கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த கொண்டு வரவில்லையென்று கால்நடையின் உரிமையாளர் உறுதியளித்திருக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்குபவர் விவசாய நோக்கத்துக்காகத்தான் வாங்கப்பட்டது என்றும், அது இறைச்சிக்காக விற்கப்படாது என்றும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்குபவர் விவசாயிதான் என்பதற்கான வருவாய்த்துறை ஆவணங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கால்நடைகளை வாங்கியவர் 6 மாத காலத்துக்குள் அதை விற்கமாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்கியவர் அதை வாங்கியதற்கான ஆவணத்தை ஆய்வாளர்கள் கேட்கும்போதெல்லாம் காட்டும் வகையில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு கால்நடைகளை விற்கக்கூடாது.

கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும். முதல் நகல் வாங்குபவரிடமும், 2-வது நகல் விற்பவரிடமும், 3-வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4-வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5-வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்திய நாடு முழுவதும் கால்நடை விற்பனையை தற்போது கொண்டுவந்திருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக விவசாயிகளைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பெரிய அளவில் மாட்டுச் சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு காரைக்குடி, இளையான்குடி, சிவகங்கை, மேலூர், காளையார்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் குவிந்த வண்ணம் இருக்கும். ஆனால் இம்முறை மத்திய அரசின் அதிர்ச்சி உத்தரவால், சந்தை களையிழந்து காணப்பட்டது.

தேவகோட்டை மாட்டு வியாபாரிகளிடம் பேசும்போது, 'மாடுகளை வாங்கி விற்றுத்தான் எங்க பிழைப்பு நடக்குது. இந்த வருமானத்தில் இருந்து பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். கல்யாணம் முதல் நல்லது கெட்டது வரை செய்கிறோம். எங்களுக்கு வேற தொழில் தெரியாது. எங்க பிழைப்பு கேள்விகுறியாக போச்சு. வயதான மாடு, அடிமாடு எல்லாத்தையும் வச்சுருந்து பராமரிக்க முடியாது. இப்ப இருக்கிற வறட்சிக்கு புல், தண்ணீ இல்லாம நாங்க ஆடு, மாடுகளைக் காப்பாற்ற ரொம்ப கஷ்டப்படுகிறோம். மத்திய அரசின் உத்தரவில் நிச்சயமாக மாற்றம் கொண்டு வரவேண்டும்.' என்கிறார்கள். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close