Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”மோடியின் ஆட்சியில் மதக்கலவரங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது”- நக்மா குற்றச்சாட்டு

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டுவிழா புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பிரதேச மகிளா காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி ஷோபா ஓஷா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளர் நக்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நக்மா, “இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்பது மட்டுமல்லாமல் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் அகில இந்தியத் தலைவியாகவும் சிறப்பாக செயல்பட்டவர் அன்னை இந்திராகாந்தி. மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும் என்று பாடுபட்ட அவர் அனைவராலும் இரும்புப் பெண்மணி என்று அறியப்பட்டவர். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சியைக் கொண்டு வந்தார். ஆனால், மோடியின் கடந்த மூன்று ஆண்டுகால பித்தலாட்ட ஆட்சியில்  மதக்கலவரங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மோடியாலும், பா.ஜ.கவினாலும் இஸ்லாமியர்கள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள்  என பாதிக்கப்படாதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது. ராணுவத்தில் அதிகமாக இருக்கும் சீக்கியர்களையும் இவர்களின் அரசு விட்டுவைக்கவில்லை. 

இப்படியான சோதனையான தருணத்தில் நேரு, சோனியா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரை நினைவுகூர்ந்து சோனியா, ராகுல் தலைமையை ஏற்க மக்கள் முன்வரவேண்டும். நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதமும் சட்டமன்றத்தில் 50 சதவிகிதமும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தரவேண்டும் என்பது ராகுல் காந்தியின் பெரிய கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவோம் என அன்னை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியேற்றுள்ளனர். தற்போது நாட்டில் நிலவி வரும் பிரச்னைகளைத் தீர்க்க பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து  தீர்வு காண வேண்டும்” என்றார்.


 

தொடர்ந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்களுக்குப் பதில் அளித்த அவர், “எந்த கட்சியில் சேருவார் என்பதை ரஜினி தான் முடிவு செய்வார். மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளை விட்டு மாட்டிறைச்சி உள்பட சிறிய விஷயங்களில் மோடி அரசு  அதிக கவனம் செலுத்துகிறது” என்று குற்றசாட்டினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close