Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புகழைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று அவரது இல்லத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மக்கள், தம் கோரிக்கை மனுக்களை முதல்வரிடமே நேரடியாகக் கொடுத்தனர்.  

Edappadi Palanisamy

மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை  எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒருமுறைகூட தூர்வாரப்படவில்லை. எனவே, தமிழக வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இந்தப் பணியால், அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளமும் அதிகரிக்கும். முதல்வரின் இந்த முயற்சிக்கு, மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகள் கிடைத்தன. 

இந்த நிலையில், பாராட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, சேலத்திலிருந்து திரும்பியவுடன், தன் இல்லத்தில் பொதுமக்களைச் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார் முதல்வர். அதுமட்டுமன்றி, ஒவ்வொருவரிடமும் சிறிது நேரம் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டுக்கொண்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close