Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலில் அதை நிறுத்துங்கள்! மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் கலாய்த்த ஹெச்.ராஜா

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார்.

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிடுவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமரைச் சந்திக்க தி.மு.க தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதுநாள் வரை மு.க.ஸ்டாலினை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினரைச் சந்தித்து பிரதமர் பேசினார். இந்தச் சந்திப்பு, கடும் விவாதப்பொருளாக மாறியது.

இதையடுத்து, பிரதமரையும்  மத்திய அரசையும் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துவருகிறார். இந்த விமர்சனம்குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்துள்ளார். "ஸ்டாலின் பொய் பேசுவதை நிறுத்தினால், பிரதமரைச் சந்திக்க நேரம் வாங்கித்தருகிறேன். பாரதிய ஜனதாவுடன் மோதுவது, பாறையுடன் மோதுவதற்குச் சமம்; திருமாவளவன், சீமான் கலவரப் புத்தியுடன் இருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கால்நடைகளைக் காப்பாற்றும் பிரச்னையை மதத்துடன் ஒப்பீடு செய்யவேண்டாம். விவசாயிகளைக் காப்பாற்றவே பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் மிக வேகமாக பா.ஜ.க முன்னேறி வருகிறது. கருணாநிதி அரசியலில் இல்லாத காரணத்தால், பல புதிய போராட்டங்கள் நடைபெறுகின்றன" என்று கூறியுள்ளார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close