Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு! தமிழகத்தில் நாளை மருந்துக் கடைகள் மூடல்

ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதைக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே 30ஆம் தேதி) முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனை


ஆன்லைனில், இருந்த இடத்திலிருந்தே பொருள்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவரும் நிலையில், மருந்துகளும் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன. இவ்வாறு விற்பனை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள், முறையான அனுமதி ஏதுமின்றிச் செயல்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பல முறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக, மருந்து விற்பனை வணிகர்கள் நாளை கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளனர். ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிர்ப்பலைகள் எழுந்துவரும் அதேவேளை, ஆன்லைனில் மருந்துகள் விற்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close