Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருவமடைந்ததால் படிப்பு இழந்த 113 மில்லியன் பெண்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த ‘அவள்’ நிகழ்வு

மாதவிடாய் மூடநம்பிக்கைகள் குறித்த தெருக் கூத்து

வளின் மூன்று நாள்கள் மாதவிடாய்க் காலத்தில்தான் அந்தப் பெண்ணின் அப்பா மரணித்துவிடுகிறார். ஆனால், அவள் 'வீட்டுக்குத் தீட்டு’ என்று ஒதுக்கிவைக்கப்பட்டு அவளது அப்பாவின் முகத்தைக்கூட இறுதியாகப் பார்க்கவிடாமல் ஓரங்கட்டப்படுகிறாள். இது, சினிமாக் கதையல்ல. 'தாகம்' அமைப்பு நடத்திய மாதவிடாய்த் தொடர்பான விழிப்பு உணர்வு உரையாடல் அரங்குக்கு வந்திருந்த பெண் ஒருவர், தனக்கு நடந்ததாகக் குறிப்பிட்ட அனுபவம்.
 

அவள்

பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் பற்றிப் பேச வேண்டியது அவசியம் என்றாலும், பெண்கள் அனுபவிக்கும் மாதவிடாய்ப் போன்ற பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்குப் பெரிய அளவில் குரல் வலுப்பதில்லை. அதற்கு அவர்களிடமிருந்தேதான் விழிப்புஉணர்வு தொடங்க வேண்டும். இந்த அடிப்படையில் ‘அவள்’ என்கிற நிகழ்வை நடத்தியது ‘தாகம்’ அமைப்பு.

தாகம்

பருவமடைந்ததன் காரணமாகவே இந்தியாவில் 113 மில்லியன் பெண்கள் தங்களது கல்வியை இழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலைப் பகிர்கிறார் ’அவள்’ நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மீனாட்சி. 
 

தெருக்கூத்து

’அவள்’ குழுவினரால் பறை இசையுடன் அரங்கேற்றப்பட்ட தெருக்கூத்து நாடகம் ‘தீட்டு’ என்கிற போர்வையிலும், ‘மதச்சடங்குகள்’ என்கிற அடிப்படையிலும் மாதவிடாய்ச் சார்ந்த மூடநம்பிக்கைகள் எப்படி இன்றளவும் மக்களிடம் பரவலாக இருக்கிறது என்பதை விவரித்தது. பெண்ணைக் காதலிப்பவன் அவளுக்கு மாதவிடாய் என்றதும் ’அய்யோ சாமி’ என்று தள்ளி நிற்பதும், வெளியே எவ்வளவு வலிமையுடன் பெண்கள் வலம் வந்தாலும், மாதத்தின் அந்த மூன்று நாள்கள் என்றால் சமூகத்தில் இருக்கும் பல கோடி பெண்களும் தங்கள் வீட்டளவில் மட்டுமே என்னென்ன மாதிரியான வசவுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கோர்வையாகத் தொகுத்து நாடகப்படுத்தியிருந்தார்கள் குழுவினர்கள். 

வீட்டில் பூஜை செய்யப் புனிதம் கெட்டுவிட்டது என்கிறார்கள்; உன் வலிமை இவ்வளவுதான் என முடக்குகிறார்கள்; நாப்கினை வெளியே தெரியும்படி வைக்காதே என்கிறார்கள்; அப்பா முன்பும் வீட்டு ஆண்கள் முன்பும் நிற்காதே என்கிறார்கள்; வெளியே திரியாதே என்று வசவுகளும் வந்து விழுகின்றன... இப்படி இன்னும் பல. சினைமுட்டை உடைதல் என்னும் பெண்கள் உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுக்காகவே இத்தனை ஏச்சுகளும். இவை அத்தனையும் தெருக்கூத்திலும் காட்சி படுத்தியிருந்தார்கள்.

இதைப் படித்ததும், ‘மாதவிடாய்க் காலத்தில்... நான் என்னென்ன மாதிரியான சமூக மற்றும் குடும்பப் பிரச்னைகளை எதிர்கொண்டேன்' என்கிற கேள்வி உங்களுக்கும் எழலாம். அதற்கான விழிப்புஉணர்வும், விடையும், விடுதலையும் உங்களுக்குள்தான் அடையமுடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close