Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20 லிட்டர் குடிநீர் கேனின் விலை இனி 60 ரூபாய்! - என்ன காரணம்?

 குடிநீர்

 

மத்திய அரசு, குடிநீர் கேன் மீது 18 சதவிகிதம் சரக்கு சேவை வரி விதித்துள்ளதால், 20 லிட்டர் குடிநீர் கேனின் விலை, இனி 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 350-க்கும் மேற்பட்ட சிறு, குறு, குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கிருந்து சென்னைக்கு மட்டும் 10 லட்சம் குடிநீர் கேன்கள் விற்பனைசெய்யப்படுகின்றன. குடிநீர் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து டீலர்கள் 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி, பொதுமக்களுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். தற்போது, கோடைகாலம் என்பதால், குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், குடிநீர் தேவையைச் சமாளிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரித்து, பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மேலும், கடல் நீரைச் சுத்திகரித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும், குடிநீர் தட்டுப்பாடு சென்னையில் பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் கேட்டு, பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், 20 லிட்டர் கேன் குடிநீரை மட்டுமே பொதுமக்கள் நம்பியிருந்த சமயத்தில், அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கேன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் சொல்கின்றனர்.

குடிநீர் கேன்


 இதுகுறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கக் காப்பாளர் முரளியிடம் பேசினோம். "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள்மூலம், 20 லிட்டர் கேனில் குடிநீர் அடைக்கப்பட்டு சென்னைக்கு சப்ளை செய்யப்படும். இதற்கான அனுமதியைப் பெற்றுதான் இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஐஎஸ்ஐ தரச் சான்று பெற்ற குடிநீர் நிறுவனங்கள், நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது என்று கூறி மாதவரம், மஞ்சக்குப்பம், வாணியம்பாடி உள்பட பல்வேறு இடங் களில் 33 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 80 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காகத்தான் நாங்கள் நிலத்தடி நீரை எடுக்கிறோம். ஆனால், குளிர்பான நிறுவனங்களும் சாராயத் தொழிற்சாலைகளும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. அதை, அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் மத்திய அரசு, குடிநீர் கேன் மீது 18 சதவிகிதம் சரக்கு சேவை வரி விதித்துள்ளது. இது, குடிநீர் கேன்களின் விலையை அதிகரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைப்பது, சரக்கு சேவை வரி ஆகியவற்றைக் கண்டித்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு, சரக்கு சேவை வரியை குடிநீர் கேன்களுக்கு மட்டும் விதித்துள்ளது. ஆனால், தனியார் பாலுக்கு விதிக்கவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் குடிநீர் கேன்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. எனவே, குடிநீர் கேன்களுக்கு விதிக்கப்பட்ட வரியை விலக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இதுதொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதில் எடுக்கப்படும் முடிவு அடிப்படையிலேயே, அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். எங்களது போராட்டத்தால், சென்னைக்கு தினமும் சப்ளை செய்யப்படும் 10 லட்சம் குடிநீர் கேன்களின் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால், குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் 18 சதவிகிதம் வரி விதிப்பால், இனி 20 லிட்டர் குடிநீர் கேனின் விலை, 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, மக்கள் நலன்கருதி மத்திய அரசு வரிவிதிப்பை விலக்க வேண்டும் என்றார். 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close