Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்வைக்குறைபாடு இருந்தாலும் சாதிக்க முடியும்... சிபிஎஸ்இ தேர்வில் நிரூபித்த தர்சனா !

சிபிஎஸ்இ தேர்வில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவி தர்சனா, 483 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

disability category
 

நாடு முழுவதும் நேற்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கிருஷ்ணகிரி நாளந்தா பொதுப் பள்ளி மாணவி தர்சனா, 483 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர், பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண்கள் விவரம் : ஆங்கிலம் 94, கம்ப்யூட்டர் சயின்ஸ் 97, பிஸினஸ் ஸ்டடீஸ் 99, எக்கனாமிக்ஸ் 98, அக்கவுன்டன்சி 95.
சாதனை படைத்த மாணவியின் தந்தை மோகன், வியாபாரம் செய்துவருகிறார். தாய் பெயர், விஜயலட்சுமி.

cbse


 

சாதனைகுறித்து மாணவி தர்சனா கூறுகையில், ’பிறந்ததில் இருந்தே வலது கண்ணில் குறைபாடு இருந்தது. இடது கண்ணில், இரண்டு வயதில் கார்னியா அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். பார்வைக் குறைபாடு இருந்தாலும் சாதிக்க முடியும் என்று பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். மேலும், நாளந்தா பள்ளி நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிறுவனர்கள் கௌதமன், டாக்டர் புவியரசன், முதல்வர் உமா ஆகியோரின் சீரிய ஒத்துழைப்பால்தான் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது. நான் மேற்கொண்டு பி.காம். படித்து பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறேன்’ என்றார் தன்னம்பிக்கையுடன்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close