Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி விவகாரம்! மத்திய அரசுக்கு சவால்விடும் முதல்வர் நாராயணசாமி

'மாட்டிறைச்சி தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது' என்று மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

வர்த்தகரீதியாக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு, கேரள அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில முதல்வர் பிரனாயி விஜயன் அதிடியாக அறிவித்தார். இந்த நிலையில்,' மாட்டிறைச்சி தடைச் சட்டம்  புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது' என முதல்வர் நாராயணசாமி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், மாட்டிறைச்சி தடைச் சட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளேன். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தனிச் சட்டம் கொண்டுவரப்படும். மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்றாமல் இருப்போம்.

மக்கள் எதிர்த்தாலும் சட்டத்தைத் திணிக்கின்றனர். மாட்டிறைச்சி எடுத்துச் செல்வோரைத் துன்புறுத்துவது, தாக்குவது உள்ளிட்ட செயல்கள் வடமாநிலங்களில் நடைபெறுகின்றன. இந்த உணவை உண்ண வேண்டும், உண்ணக்கூடாது என்று யாரும் யாரையும் கூறமுடியாது. புதுச்சேரி, ஃபிரெஞ்ச் கலாசார அடிப்படையில் வந்தது. மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிகமாக உள்ளனர். ஏழைகள் உண்ணும் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. கர்நாடக, கேரள முதல்வர்கள், மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளனர்' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close