Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரோம் சர்மிளாவின் வெளிநாட்டுக் காதலரைப் பற்றி சமூக ஆர்வலர் மகேந்திரன் ருசிகர தகவல்!

மணிப்பூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, இரோம் சர்மிளா. தனது இளமைக் காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்தவர். மணிப்பூர் மக்களின் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தவர். அதற்கான பலன் கிடைக்கும் என அரசியலில் குதித்தவருக்கு, அந்த மக்கள் அளித்தது, வெறும் 90 வாக்குகள். வெறுத்துப்போன இரோம் சர்மிளா, அமைதி தேடி மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பே கொடைக்கானல் வந்த இரோம் சர்மிளா, பெருமாள்மலைப் பகுதியிலிருக்கும் ‘போதி ஜென்டா’ என்ற தியான மையத்தில் தங்கியிருந்தார். அதன் பிறகு டெல்லி சென்றவர், சில வாரங்களுக்கு முன், மீண்டும் கொடைக்கானல் திரும்பியிருக்கிறார்.

’அப்சர்வேட்டரி’ பகுதியில் நிரந்தரமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார். தனக்கான தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்ப்பதில்லை. டவுன்பஸ் பிடித்து, நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், அடுத்த மாதம் அவருக்குத் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அமைதி தேடி கொடைக்கானல் வந்த இரோம் சர்மிளாவை காலில் விழுந்து வரவேற்றவர், கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன். தற்போது, இரோம் சர்மிளாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் மகேந்திரன், இரோம் சர்மிளா பற்றிய சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இரோம் சர்மிளா

 

‘‘மக்கள் பிரச்னைக்காக தன் இளமைக் காலத்தை போராட்டத்திலேயே கழிச்ச, இரோம் சர்மிளாவோட தியாகம் ரொம்பப் பெருசு. மணிப்பூர்ல இருந்து வேதனையோட, அமைதி தேடி வந்தவங்களை நான் கால்ல விழுந்து வரவேற்றேன். உங்க மாதிரி ஒரு போராளி, எங்க மண்ணுக்கு வந்ததுக்கு எங்களோட மரியாதை இதுன்னு சொல்லித்தான் அவங்க கால்ல விழுந்தேன். அவங்க யாரையும் சந்திக்க விரும்புறதில்லை. இப்ப எனக்கு அமைதி தேவைனு சொல்லிட்டாங்க. கொடைக்கானல்ல நிலவும் இதமான சூழ்நிலை, அதிக மாசுபடாத காற்று, இதெல்லாம் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. கடைக்குப் போறது, காய்கறி வாங்குறதுனு, அவங்க தேவைகளை அவங்களே பார்த்துக்கிறாங்க. இங்க இருக்கிற மக்கள், அவங்களை எந்த வகையிலயும் தொந்தரவு செய்றதில்லை. அது, அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இனிமே அவங்க நிரந்தரமா கொடைக்கானல்லதான் தங்கப்போறாங்க. இனிமே அரசியல், போராட்டங்கள்ல ஈடுபடப்போறதில்லைனு சொல்லிட்டாங்க. தன்னோட காதலரைத் திருமணம் செஞ்சிகிட்டு, குடும்ப வாழ்க்கையில ஈடுபடப்போறாங்க’’ என்றவர், அவரது காதலரைப் பற்றியும் சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘அவங்க காதலர், தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோ, அயர்லாந்து நாட்டுக்காரர். உலகம் முழுக்க இருக்கிற போராளிகள் விவாதிச்சுக்கிறதுக்கான ஒரு சோஷியல் மீடியாவோட அட்மினா இருக்கார். சர்மிளாவோட ‘பர்னிங் ஆப் பிரைட்’ புத்தகத்தைப் படிச்சுட்டு, அவங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கார். தொடர்ந்து, அவர் தன்னோட காதலைத் தெரிவிச்சுட்டே இருந்திருக்கார். நாலு வருஷம் கழிச்சுதான் அவரோட காதலை சர்மிளா ஏத்துக்கிட்டாங்க. அவரும் கொடைக்கானல் வந்திருந்தாரு. எங்ககூட சகஜமா பழகுறார். சர்மிளா, மணிப்பூரி மொழி மட்டும்தான் பேசுறாங்க. மொழிபெயர்ப்பாளர் ஒருத்தர் கூட இருக்கார். அடுத்த மாசம், இவங்க திருமணம் நடக்கப்போகுது. அதுக்கான ஏற்பாடுகள் நடந்துகிட்டிருக்கு. இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கப்போகுது’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close